தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி (Supergood Subramani) காலமானார்.
இவர் நேற்று (10) உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நடிகர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இரங்கல்
நான்காம் கட்ட புற்றுநோய் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.