பனைசார் உற்பத்தியாளர்கள் மற்றும் பனம்பொருள் ஏற்றுமதியாளர்களுக்கும் பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சு.பிரதீப்பிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாலானது இன்று (18) பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வி.சகாதேவன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள்
இதன்போது பனை சார் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தாம்
எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பெருந்தோட்ட பிரதி அமைச்சர் பிரதீப்பிடம்
எடுத்துரைத்திருந்தனர்.